சென்னை,
20.06.2016.
அன்புள்ள அண்ணாமலையாருக்கு,
அன்பன் சுப்ரமணியன் எழுதுவது. உன்னிடம் செல் போன் இல்லாததாலும், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லை என்பதாலும் இப்படிக் கடிதம் எழுத வேண்டியுள்ளது. நான் கடிதம் எல்லாம் எழுதி பல காலமாகிவிட்டது. இப்போதெல்லாம் e - mail, message, Whats app, Facebook இப்படித்தான் தொடர்பு கொள்கிறேன். என்னமோ நான் ஜம்பமாகச் சொல்வதாக நினைக்காதே. என் ஜம்பம் உன்னிடம் சாயாது என்பது நம் இருவருக்கும் தெரியும். நிற்க. நாங்கள் பத்திரமாக நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தோம்.
தினமும் காலையில் உன்னை வந்து அடைய வேண்டும் என்று நினப்பது வாடிக்கைதான்.
அதுக்காக திடீரென்று, "சனிக்கிழமை என்னை வந்து பார்" என்று கனவில் வந்து சொன்னால் என்ன அர்த்தம்? மாதக் கடைசியில் ஒரு பென்சன் வாங்கும் குடும்பஸ்தன் கஷ்டங்கள் நீ அறியாததா? எப்படியோ உருட்டிப்பிரட்டி சனிக்கிழமை வர முடிவு செய்து விட்டேன்.

ஒரு டவேரா வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடும்ப சகிதம் சனிக்கிழமை கார்த்தால 7 மணிக்கு கிளம்பினோம். போருர் டோல் ஆரம்பிச்சா உன்னை வந்து சேர்வதற்குள் 75, 75 ரூபாயா சொத்து பூராவும் காலியாகி விடும் போல. அச்சிறுப்பாக்கத்தில் ரமணா ஹோட்டல் அருகே கையில் கொண்டு வந்திருந்த இட்லி, சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டாயிற்று. பாவம் என் மனைவி, ரகுராம் ராஜன் மாதிரி நம்ம நிதி நிலையைப் புரிஞ்சிண்டு காலை 4 மனிக்கே எழுந்து டிபன் தயார் செய்து இருந்தாள். இல்லாவிட்டால் இன்னும் ஒரு 1000 ரூபாய் துண்டு விழுந்திருக்கும்.
டிரைவர் பாலா நல்ல மனிதர். அதிகம் சிரமம் இல்லாமல் அருமையாக காரை இயக்கினார். வழக்கமா சாஸ்தாக் குட்டி சார்தான் வருவார். இந்த முறை அவர் குற்றாலத்திற்குச் சென்று விட்டதால் பாலா வந்தார். 1970 - 1980 கால கட்ட இளைய ராஜா பாட்டாகப் போட்டார். நன்றாக அனுபவித்தோம். "ஆமாம் பக்திப் பாடல்கள் கிடைக்கவில்லையா" என்ற உன் முணுமுணுப்பு கேட்கிறது.
S.P.B யின் நமச்சிவாயா பாட்டும் கேட்டோம். இப்பொ திருப்தியா?
10.30 க்கு உன் ஊருக்குள் வந்து விட்டோம். நல்ல நேரம் பார்த்து வரச் சொன்னாய். அன்று மாலை முதல் பௌர்ணமி. உன்னைச் சுற்ற வரும் அடியவர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வாகனங்களை 3 கிலோமீட்டர் தூரம் உன் வீட்டிலிருந்து தள்ளி நிறுத்தச் சொல்லுவார்களாமே. நல்ல வேளை நாங்கள் உன் இல்லம் வரும் வரை அப்படி நெரிசல் இல்லை.
வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினால் உன் வீட்டை மராமத்து அதாவது திருப்பணி செய்கிறார்கள். அதை நீ சொல்லவே இல்லையே. சரி என்னைப் போல எத்தனை பேர் கனவில் வர வேண்டியுள்ளது. உனக்கும் அலைச்சல்தான். சரி மராமத்து நடக்கும் வீட்டில் எப்படி நீயும் உண்ணாமலை தாயாரும் இருக்கமுடியும்? ஒரே தூசும் தும்புமாக இருக்குமே. அலர்ஜி ஆகிவிடும். ஜாக்கிரதை.
உன் இல்லத்திற்கு வருவதற்கு முன் காலணிகளை விட காலணி பாதுகாப்பு மையத்திற்கு வந்தால் பெரிய எழுத்தில் இலவசம் என்று போட்டிருந்தார்கள். ஆனால் அங்கு எட்டு சோடிகளுக்கு 16 ரூபாய் கேட்டனர். கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால் கேட்ட மனிதர் சிவப்பழமாக இருக்கவே என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு அடுத்து வந்த மனிதர் வாய் விட்டே கேட்டு விட்டார். அவருக்கு நல்ல அர்ச்சனை கிடைத்தது.
காசு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. 5 ரூபாய் கூட வாங்கிக் கொள்ளட்டும். சட்டப்படி காலணி பாதுகாப்புக்கு 5 ரூபாய் என்று போர்ட் போட்டு வசூலிக்கட்டும். அதை விடுத்து இலவசம், காசு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று பெரிய அறிவிப்புப் பலகை எல்லாம் வைப்பது யாரை ஏமாற்ற? எதுக்கு எல்லாம் யோக்கியமாக நடப்பதாக ஒரு பில்டப்? உன்னை ஏமாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாவம். அறியாமல் செய்கிறார்கள் மன்னித்து விடு. அந்த பொய்கள் உன் கண்ணெதிரவே நடப்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாயிருந்தது.
உள்ளே சுமாரான கூட்டம். அதிலும் புதிது புதிதாக ஆட்கள் உன்னைப் பார்க்க குறுக்கு வழியில் சேர்கிறார்கள். எல்லாம் உன் மைத்துனர் மனைவி லட்சுமியின் கடாட்சம்தான் காரணம். கொடுக்க வேண்டியதை கொடுத்து உன்னை சீக்கிரம் பார்த்துவிட வேண்டுமாம். அந்த கூட்டத்தில் நீ யாரைப் பார்த்தாய் ? உன்னையே நினைத்த பூசலாருக்கு முதல் இடம் தந்து ராஜராஜனை பின்னுக்குத் தள்ளியவன் ஆயிற்றே நீ. கட்டாயம் உனக்கு தரிசனம் தந்த செல்வந்தர்களைவிட ஏழை பக்தன் தான் உனக்கு முக்கியம் என்பது கூட அறியாத மனிதர்கள். உன்னை விற்பனை செய்பவர்களையும் பொறுத்தருள்வாய். காரணம் அன்பே சிவம் என்பாய். சரி.
நீ ஏமாந்த சோணகிரிதான். பஸ்மாசுரன் முதல் இன்றைய பல திருத்தல நிர்வாகங்கள் வரை எல்லாரும் உன்னை நல்லா ஏமாற்றுகிரார்கள். உனக்கு நல்லா அபிசேகம் பண்ணினால் உச்சி குளிர்ந்து போய் எல்லாவற்றயும் மன்னித்து விடுவாய்.
அம்மை உண்ணாமுலையின் சன்னதியில் கூட்டம் இல்லை. யாரோ நல்ல உள்ளம் கொண்ட சிவனடியார்கள் இரண்டு பேர் தந்த சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சாப்பிட்டு கை கழுவினோம். நல்லவேளை கை கழுவும் தண்ணீருக்கு நிர்வாகம் காசு வாங்கவில்லை.
உன் சொத்துக்களை ஊரெங்கும் சாப்பிடுகிறார்கள். நீயோ இமைய மலையில் இயற்கை AC யில் புலித்தோலை கட்டிக் கொண்டும் இடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டும் கவலையின்றி இருக்கிறாய். என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது. அந்த அளவு உடல் வலிமை நீ அருளவில்லையே. பரவாயில்லை, இந்த உலக மேடையில் ஆடி முடிந்ததும் அங்கு வந்து உன் திருப்பாதம் தானே அடையப் போகிறேன்.
முதலில் ரமணாசிரமம். நாங்கள் சென்ற நேரம் அதிஷ்டானம் திறக்கவில்லை.எனவே வெளியில் சுற்றிவிட்டு அதிஷ்டான சன்னதியை வணங்கி வெளியே வந்தோம்.அடுத்தது உன் வீட்டைச் சுற்றி வந்தோம். காரில்தான் வலம் வந்தோம். 14 கிலோமீட்டர் வலம் வர உடம்பில் தெம்பு இல்லை. ஈசானலிங்க சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் ஒரு சிவனடியார் காசு கேட்டார். பார்க்கும் சிவனடியார்களுக்கு கொடுக்க 1 மற்றும் 2 ரூபாய் நாணயங்கள் வைத்திருந்தேன். அதில் ஒன்றைத் தந்ததும் கோபமாக இதையெல்லாம் வாங்க மாட்டேன்.
கோவில் கட்டிக் கொண்டிருக்கிறேன். வந்து என் ஊரில் பார் என்றார். அவரது சிவபக்தியைப் பார்த்து 10 ரூபாய் வாங்கிய பின் பெரிய கும்பிடு போட்டார். சிவனடியார் இந்த அற்ப மானிடனை 10 ருபாய் காசுக்கு கும்பிட்டதை சகிக்க முடியவில்லை.

அடுத்து அடையார் ஆனந்த பவனில் நல்ல சாப்பாடு. இரண்டு விஷயங்கள் குறிப்பிட வேண்டும். முதலில் இருக்கைகளுக்கு இடையில் நல்ல இடைவெளி. மற்றது சென்னையைப் போல் சாப்பிடும் போதே பின்புறம் நின்றபடி நாம் சாப்பிடுவதை இமைக்காமல் எப்போ எழுந்திடுவோமென்ற எதிர்பார்ப்புடன் ரசம் சாப்பிட்டாச்சு, இப்போ மோர் என்று நேர்முக வர்ணனை சொல்லியபடி பார்க்கும் கூட்டம் இல்லை. சென்னையில் கல்யாண சத்திரங்களிலும் இதே கதைதான். உன் கல்யாணத்தில் பொதிகை மலையில் எப்படி சமாளித்தாய்? 33 கோடி தேவர்கள் , கோபக்கார ரிஷிகள் , பாவம் நீ .
மணி இதற்கே பிற்பகல் 3.00 இன்னும் 1மணி நேரத்தில் கிரிவலம் தொடங்கும் சமயம் என்பதால் திருக்கோவிலூரில் உன் மைத்துனர் மாலவனை காணப் புறப்பட்டோம்.
கோவிலும் அதிலுறைந்த உலகளந்தவனும் அத்தனை அழகு. கூட்டம் அவ்வளவு இல்லை. அந்த பச்சை வண்ணன் தரிசனம் மனம் நிறைத்தது.
அங்கிருந்து அப்படியே ரகோத்தமர் மடம் வந்து அவரது ஜீவ சமாதியை வணங்கினோம். குரங்குகளுக்குப் பஞ்சமில்லை. நாங்கள் சென்ற பொழுது அங்கு மாலை வேளை பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.
நீ வழி நடத்தியபடி அடுத்து ஞானந்த தபோவனம். ஞானாந்தரின் அதிஷ்டானத்தில் எளிய வழிபாட்டு முறைகள், மாலை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு எளிய உணவு வழங்கப்படுகிறது. உணவு உண்டபின், நீ வழிகாட்டியபடி என் அன்னை, தந்தை, சகோதரர் நினவு நாட்களில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் செய்தபின் சென்னை நோக்கி பயணம் . அரகண்ட நல்லூர் வரும் போது சிறிய மழை. அப்புறம் 10 கிலோமீட்டருக்குப் பின் ஒன்றுமில்லை. நள்ளிரவு 12.30 க்கு பத்திரமாக இல்லம் வந்து சேர்ந்தோம்.
எங்களை வரவழைத்து மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்க வைத்த உனக்கு எப்படி நன்றி சொல்வேன்.
உன்னிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்னை பிற மனிதர்களுக்கு உபயோகமாக வாழவை. எவரோடும் பகைமை கொள்ளாத மனதைக் கொடு.
அடுத்தமுறை பயணமும் உனக்கான பயணமாக அமையட்டும், தினமும் இங்கு என் இல்லம் அருகில் உள்ள உன் இல்லத்திற்கு வந்தால் கண்டிப்பாக நீ தூசி தும்பு பிரச்சனை இன்றி இருப்பாய் என்று நினைக்கிறேன். உனக்கும் வீட்டு ரிப்பேர் வேலைகள் முடியும் வரை சௌகரியமாக இருக்கும்.
உன்னுடைய எதையும் மன்னிக்கும் குணம் எனக்கும் கைவர வேண்டும். உன் திருக் கோயில்களில் எல்லாம் உன் மைத்துனர் க்கு இடம் தருவாய். ஆனால் உன் மைத்துனர் திருக் கோவில்களில் உனக்கு இடம் கிடையாது. இனிமேலாவது இப்படி ஏமாளியாக இருக்காதே.
நான் ராஜா மகள் எழுதிய இப்படிக்குக் கோதை யின் பிரதியெடுத்த பதிப்பு என்று நீ உண்ணாமுலைத்தாயிடம் சொல்லிச் சிரிப்பது கேட்கிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது. பூனை என்றதும் ஷாஜகான் சார் பூனைக் குட்டிகளுடன் படும் பாடு நினைவுக்கு வந்தது. அடுத்தமுறை வரும் வழியில் இளைஞர் சுந்தரபாண்டியனையும் அவர் இல்லத்தில் தினம் வரும் காக்கைகளையும் விழுப்புரத்தில் காண ஆவல்.அதற்கும் அருள் செய் ஈசனே.
சிவார்ப்பணம்.ஓம் நமச்சிவாயா.
உன் நினைவை மறவாத,
வெ.சுப்ரமணியன்.
20.06.2016.
அன்புள்ள அண்ணாமலையாருக்கு,
அன்பன் சுப்ரமணியன் எழுதுவது. உன்னிடம் செல் போன் இல்லாததாலும், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லை என்பதாலும் இப்படிக் கடிதம் எழுத வேண்டியுள்ளது. நான் கடிதம் எல்லாம் எழுதி பல காலமாகிவிட்டது. இப்போதெல்லாம் e - mail, message, Whats app, Facebook இப்படித்தான் தொடர்பு கொள்கிறேன். என்னமோ நான் ஜம்பமாகச் சொல்வதாக நினைக்காதே. என் ஜம்பம் உன்னிடம் சாயாது என்பது நம் இருவருக்கும் தெரியும். நிற்க. நாங்கள் பத்திரமாக நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தோம்.
தினமும் காலையில் உன்னை வந்து அடைய வேண்டும் என்று நினப்பது வாடிக்கைதான்.
அதுக்காக திடீரென்று, "சனிக்கிழமை என்னை வந்து பார்" என்று கனவில் வந்து சொன்னால் என்ன அர்த்தம்? மாதக் கடைசியில் ஒரு பென்சன் வாங்கும் குடும்பஸ்தன் கஷ்டங்கள் நீ அறியாததா? எப்படியோ உருட்டிப்பிரட்டி சனிக்கிழமை வர முடிவு செய்து விட்டேன்.

ஒரு டவேரா வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடும்ப சகிதம் சனிக்கிழமை கார்த்தால 7 மணிக்கு கிளம்பினோம். போருர் டோல் ஆரம்பிச்சா உன்னை வந்து சேர்வதற்குள் 75, 75 ரூபாயா சொத்து பூராவும் காலியாகி விடும் போல. அச்சிறுப்பாக்கத்தில் ரமணா ஹோட்டல் அருகே கையில் கொண்டு வந்திருந்த இட்லி, சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டாயிற்று. பாவம் என் மனைவி, ரகுராம் ராஜன் மாதிரி நம்ம நிதி நிலையைப் புரிஞ்சிண்டு காலை 4 மனிக்கே எழுந்து டிபன் தயார் செய்து இருந்தாள். இல்லாவிட்டால் இன்னும் ஒரு 1000 ரூபாய் துண்டு விழுந்திருக்கும்.
டிரைவர் பாலா நல்ல மனிதர். அதிகம் சிரமம் இல்லாமல் அருமையாக காரை இயக்கினார். வழக்கமா சாஸ்தாக் குட்டி சார்தான் வருவார். இந்த முறை அவர் குற்றாலத்திற்குச் சென்று விட்டதால் பாலா வந்தார். 1970 - 1980 கால கட்ட இளைய ராஜா பாட்டாகப் போட்டார். நன்றாக அனுபவித்தோம். "ஆமாம் பக்திப் பாடல்கள் கிடைக்கவில்லையா" என்ற உன் முணுமுணுப்பு கேட்கிறது.
S.P.B யின் நமச்சிவாயா பாட்டும் கேட்டோம். இப்பொ திருப்தியா?
10.30 க்கு உன் ஊருக்குள் வந்து விட்டோம். நல்ல நேரம் பார்த்து வரச் சொன்னாய். அன்று மாலை முதல் பௌர்ணமி. உன்னைச் சுற்ற வரும் அடியவர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வாகனங்களை 3 கிலோமீட்டர் தூரம் உன் வீட்டிலிருந்து தள்ளி நிறுத்தச் சொல்லுவார்களாமே. நல்ல வேளை நாங்கள் உன் இல்லம் வரும் வரை அப்படி நெரிசல் இல்லை.
வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினால் உன் வீட்டை மராமத்து அதாவது திருப்பணி செய்கிறார்கள். அதை நீ சொல்லவே இல்லையே. சரி என்னைப் போல எத்தனை பேர் கனவில் வர வேண்டியுள்ளது. உனக்கும் அலைச்சல்தான். சரி மராமத்து நடக்கும் வீட்டில் எப்படி நீயும் உண்ணாமலை தாயாரும் இருக்கமுடியும்? ஒரே தூசும் தும்புமாக இருக்குமே. அலர்ஜி ஆகிவிடும். ஜாக்கிரதை.
உன் இல்லத்திற்கு வருவதற்கு முன் காலணிகளை விட காலணி பாதுகாப்பு மையத்திற்கு வந்தால் பெரிய எழுத்தில் இலவசம் என்று போட்டிருந்தார்கள். ஆனால் அங்கு எட்டு சோடிகளுக்கு 16 ரூபாய் கேட்டனர். கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால் கேட்ட மனிதர் சிவப்பழமாக இருக்கவே என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு அடுத்து வந்த மனிதர் வாய் விட்டே கேட்டு விட்டார். அவருக்கு நல்ல அர்ச்சனை கிடைத்தது.காசு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. 5 ரூபாய் கூட வாங்கிக் கொள்ளட்டும். சட்டப்படி காலணி பாதுகாப்புக்கு 5 ரூபாய் என்று போர்ட் போட்டு வசூலிக்கட்டும். அதை விடுத்து இலவசம், காசு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று பெரிய அறிவிப்புப் பலகை எல்லாம் வைப்பது யாரை ஏமாற்ற? எதுக்கு எல்லாம் யோக்கியமாக நடப்பதாக ஒரு பில்டப்? உன்னை ஏமாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாவம். அறியாமல் செய்கிறார்கள் மன்னித்து விடு. அந்த பொய்கள் உன் கண்ணெதிரவே நடப்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாயிருந்தது.
உள்ளே சுமாரான கூட்டம். அதிலும் புதிது புதிதாக ஆட்கள் உன்னைப் பார்க்க குறுக்கு வழியில் சேர்கிறார்கள். எல்லாம் உன் மைத்துனர் மனைவி லட்சுமியின் கடாட்சம்தான் காரணம். கொடுக்க வேண்டியதை கொடுத்து உன்னை சீக்கிரம் பார்த்துவிட வேண்டுமாம். அந்த கூட்டத்தில் நீ யாரைப் பார்த்தாய் ? உன்னையே நினைத்த பூசலாருக்கு முதல் இடம் தந்து ராஜராஜனை பின்னுக்குத் தள்ளியவன் ஆயிற்றே நீ. கட்டாயம் உனக்கு தரிசனம் தந்த செல்வந்தர்களைவிட ஏழை பக்தன் தான் உனக்கு முக்கியம் என்பது கூட அறியாத மனிதர்கள். உன்னை விற்பனை செய்பவர்களையும் பொறுத்தருள்வாய். காரணம் அன்பே சிவம் என்பாய். சரி.
நீ ஏமாந்த சோணகிரிதான். பஸ்மாசுரன் முதல் இன்றைய பல திருத்தல நிர்வாகங்கள் வரை எல்லாரும் உன்னை நல்லா ஏமாற்றுகிரார்கள். உனக்கு நல்லா அபிசேகம் பண்ணினால் உச்சி குளிர்ந்து போய் எல்லாவற்றயும் மன்னித்து விடுவாய்.
அம்மை உண்ணாமுலையின் சன்னதியில் கூட்டம் இல்லை. யாரோ நல்ல உள்ளம் கொண்ட சிவனடியார்கள் இரண்டு பேர் தந்த சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சாப்பிட்டு கை கழுவினோம். நல்லவேளை கை கழுவும் தண்ணீருக்கு நிர்வாகம் காசு வாங்கவில்லை.
உன் சொத்துக்களை ஊரெங்கும் சாப்பிடுகிறார்கள். நீயோ இமைய மலையில் இயற்கை AC யில் புலித்தோலை கட்டிக் கொண்டும் இடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டும் கவலையின்றி இருக்கிறாய். என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது. அந்த அளவு உடல் வலிமை நீ அருளவில்லையே. பரவாயில்லை, இந்த உலக மேடையில் ஆடி முடிந்ததும் அங்கு வந்து உன் திருப்பாதம் தானே அடையப் போகிறேன்.
முதலில் ரமணாசிரமம். நாங்கள் சென்ற நேரம் அதிஷ்டானம் திறக்கவில்லை.எனவே வெளியில் சுற்றிவிட்டு அதிஷ்டான சன்னதியை வணங்கி வெளியே வந்தோம்.அடுத்தது உன் வீட்டைச் சுற்றி வந்தோம். காரில்தான் வலம் வந்தோம். 14 கிலோமீட்டர் வலம் வர உடம்பில் தெம்பு இல்லை. ஈசானலிங்க சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் ஒரு சிவனடியார் காசு கேட்டார். பார்க்கும் சிவனடியார்களுக்கு கொடுக்க 1 மற்றும் 2 ரூபாய் நாணயங்கள் வைத்திருந்தேன். அதில் ஒன்றைத் தந்ததும் கோபமாக இதையெல்லாம் வாங்க மாட்டேன்.
கோவில் கட்டிக் கொண்டிருக்கிறேன். வந்து என் ஊரில் பார் என்றார். அவரது சிவபக்தியைப் பார்த்து 10 ரூபாய் வாங்கிய பின் பெரிய கும்பிடு போட்டார். சிவனடியார் இந்த அற்ப மானிடனை 10 ருபாய் காசுக்கு கும்பிட்டதை சகிக்க முடியவில்லை.

அடுத்து அடையார் ஆனந்த பவனில் நல்ல சாப்பாடு. இரண்டு விஷயங்கள் குறிப்பிட வேண்டும். முதலில் இருக்கைகளுக்கு இடையில் நல்ல இடைவெளி. மற்றது சென்னையைப் போல் சாப்பிடும் போதே பின்புறம் நின்றபடி நாம் சாப்பிடுவதை இமைக்காமல் எப்போ எழுந்திடுவோமென்ற எதிர்பார்ப்புடன் ரசம் சாப்பிட்டாச்சு, இப்போ மோர் என்று நேர்முக வர்ணனை சொல்லியபடி பார்க்கும் கூட்டம் இல்லை. சென்னையில் கல்யாண சத்திரங்களிலும் இதே கதைதான். உன் கல்யாணத்தில் பொதிகை மலையில் எப்படி சமாளித்தாய்? 33 கோடி தேவர்கள் , கோபக்கார ரிஷிகள் , பாவம் நீ .
மணி இதற்கே பிற்பகல் 3.00 இன்னும் 1மணி நேரத்தில் கிரிவலம் தொடங்கும் சமயம் என்பதால் திருக்கோவிலூரில் உன் மைத்துனர் மாலவனை காணப் புறப்பட்டோம்.
கோவிலும் அதிலுறைந்த உலகளந்தவனும் அத்தனை அழகு. கூட்டம் அவ்வளவு இல்லை. அந்த பச்சை வண்ணன் தரிசனம் மனம் நிறைத்தது.
அங்கிருந்து அப்படியே ரகோத்தமர் மடம் வந்து அவரது ஜீவ சமாதியை வணங்கினோம். குரங்குகளுக்குப் பஞ்சமில்லை. நாங்கள் சென்ற பொழுது அங்கு மாலை வேளை பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.நீ வழி நடத்தியபடி அடுத்து ஞானந்த தபோவனம். ஞானாந்தரின் அதிஷ்டானத்தில் எளிய வழிபாட்டு முறைகள், மாலை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு எளிய உணவு வழங்கப்படுகிறது. உணவு உண்டபின், நீ வழிகாட்டியபடி என் அன்னை, தந்தை, சகோதரர் நினவு நாட்களில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் செய்தபின் சென்னை நோக்கி பயணம் . அரகண்ட நல்லூர் வரும் போது சிறிய மழை. அப்புறம் 10 கிலோமீட்டருக்குப் பின் ஒன்றுமில்லை. நள்ளிரவு 12.30 க்கு பத்திரமாக இல்லம் வந்து சேர்ந்தோம்.
எங்களை வரவழைத்து மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்க வைத்த உனக்கு எப்படி நன்றி சொல்வேன்.
உன்னிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்னை பிற மனிதர்களுக்கு உபயோகமாக வாழவை. எவரோடும் பகைமை கொள்ளாத மனதைக் கொடு.
அடுத்தமுறை பயணமும் உனக்கான பயணமாக அமையட்டும், தினமும் இங்கு என் இல்லம் அருகில் உள்ள உன் இல்லத்திற்கு வந்தால் கண்டிப்பாக நீ தூசி தும்பு பிரச்சனை இன்றி இருப்பாய் என்று நினைக்கிறேன். உனக்கும் வீட்டு ரிப்பேர் வேலைகள் முடியும் வரை சௌகரியமாக இருக்கும்.
உன்னுடைய எதையும் மன்னிக்கும் குணம் எனக்கும் கைவர வேண்டும். உன் திருக் கோயில்களில் எல்லாம் உன் மைத்துனர் க்கு இடம் தருவாய். ஆனால் உன் மைத்துனர் திருக் கோவில்களில் உனக்கு இடம் கிடையாது. இனிமேலாவது இப்படி ஏமாளியாக இருக்காதே.
நான் ராஜா மகள் எழுதிய இப்படிக்குக் கோதை யின் பிரதியெடுத்த பதிப்பு என்று நீ உண்ணாமுலைத்தாயிடம் சொல்லிச் சிரிப்பது கேட்கிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது. பூனை என்றதும் ஷாஜகான் சார் பூனைக் குட்டிகளுடன் படும் பாடு நினைவுக்கு வந்தது. அடுத்தமுறை வரும் வழியில் இளைஞர் சுந்தரபாண்டியனையும் அவர் இல்லத்தில் தினம் வரும் காக்கைகளையும் விழுப்புரத்தில் காண ஆவல்.அதற்கும் அருள் செய் ஈசனே.
சிவார்ப்பணம்.ஓம் நமச்சிவாயா.
உன் நினைவை மறவாத,
வெ.சுப்ரமணியன்.

மிக அருமை... உங்கள் எழுத்து நடை ரசித்தேன்..!
ReplyDeleteஅன்புடன்
----முரளி
மிக்க மகிழ்ச்சி. நன்றி. உங்கள் ஊக்கம்தான் எனக்கு மேலும் எழுதத்தூண்டுகிறது.
Deleteஅன்புடன்,
வெ.சுப்ரமணியன்