ஆம்னி பஸ்ஸில் திருச்சி பயணம்.
பஸ் புறப்படும் போது மூச்சிரைக்க ஓடி வந்தவர் சிநேகமாய் சிரித்து வாங்க லேட் ஆயிடுச்சு என்றார். மைய்யமாக சிரித்து வைத்தேன். டிக்கெட் செக் முடிந்து விளக்குகள் அணைத்ததும் அஜீத் ஆலுமா டோலுமா என்றார்.
பஸ் புறப்படும் போது மூச்சிரைக்க ஓடி வந்தவர் சிநேகமாய் சிரித்து வாங்க லேட் ஆயிடுச்சு என்றார். மைய்யமாக சிரித்து வைத்தேன். டிக்கெட் செக் முடிந்து விளக்குகள் அணைத்ததும் அஜீத் ஆலுமா டோலுமா என்றார்.
படத்தில் கவனமாயிருந்தேன்.
பக்கத்து சீட் , சாப்பிடாம வந்திட்டேன். நீங்கள் சாப்பிட்டீஙகளா என்றார். ஆம் என்றதும் வெறும் வயிருல பிரட்டும் என்றார்.
அப்ப நான் சாப்பிடப் போறேன் சரிங்களா என்றார். ஓகே ஓகே என்றதும் பையிலிருந்து
ஒரு குவாட்டர எடுத்து ,இத வாங்கத்தான்
லேட் ஆயிடுச்சு என்றபடி சர்வசாதாரணமா சாப்பிட ஆரம்பிச்சார்.நீங்க சாப்டதால தரல , சாரி என்றார்.
அப்புறம் ஆவ் ஆவ் ன்னு ஏப்பம். இந்த மாதிரி ஆட்களை சமாளிப்பது படு கஷ்டம். ஓரே விஷயத்த திரும்பத் திரும்ப பேசி என்ன நான் சொல்றது என்பவர் ஒருவகை.
ஒத்த பொம்பள எப்படி இவனுங்கள கண்ணுல விரல விட்டு ஆட்டுது அல்லது தமிழின தலைவன் சார்,என்று அரசியல் பேசறது ஒருவகை. இத கையாள திறமை தேவை.இந்த வகை திடீரென, என்ன தலை மட்டும் ஆட்டற, பெரிய அப்பா டக்கரா நீ என்று பேச ஆரம்பித்து விடும்.
அடுத்த வகை அழுகை பார்ட்டிகள்.பாஸு போய்ட்டா பாஸு. மறக்க முடியல பாஸ் தேவதாஸ்கள். இறங்கறதுக்குள் கண்ணீர் விட்டே டீ ஹைட்ரேட் ஆகிடும்
அடுத்தது மட்டயாகற கேஸ்கள். பிரச்சனையே கிடையாது.
இதெல்லாம் சமாளிக்கலாம் ஆனா உவ்வே பார்ட்டிகள் தான் பிரச்சனை.நம் ஆளு விட்ட ஏப்பம் இது உவ்வே ன்னு உறுதியாடுச்சு. பார்ட்டி என்னை சார் எங்க போறீங்க என்றதும் திருச்சி என்றதும், நல்லதா போச்சு. என்னய கூட்டேரிபட்டுல எழுப்பிட சொல்ல, சரி என்றேன். மனசுல கவலையுடன்.
வெளியே செங்கல்பட்டு பைபாஸில் பஸ் விரைந்து கொண்டிருந்தது. மதுராந்தகம் வரும் போது பாட்டில் கீழே விழுந்து உடைய பக்கத்து சீட் நல்லா மட்டையாகி இருந்தார்.
மாமண்டூரில் பஸ் நிறுத்தப்படுவதை அறிவித்து விளக்கை போட்ட கண்டக்டர்,பாட்டில பார்த்து டென்ஷனானவர், பஸ் மதுராந்தகம் வந்ததும் நம்ம ஆள கூட்டேரிப்பட்டு என்று பொய் சொல்லி இரக்கமே இல்லாம பாதி தூக்கத்தில் இறக்கி விட்டார்.
ஒரு குடிமகனை சமூகம் எப்படி எல்லாம் ஏமாற்றுது. மனசில உவ்வே பயம் இல்லை என்ற சந்தோசத்தையும் மீறி அந்த மனிதன்மீதான பரிதாப உணர்வே அதிகமாயிருந்தது.





