இன்று (01.05.2016) நண்பர் திரு. ஜெ.அப்பாவு அவர்கள் மகளின் மஞ்சள் நீராட்டு விழா மாலை ஏழு மணிக்கு. நண்பர்கள் மதியம் மூன்று மணி காட்சி எதாவது படம் போய்விட்டு அப்புறம் நிகழ்ச்சிக்குப் போகலாம் என்று யோசனை வழங்க அப்படியே செய்ய முடிவானது.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பழைய வீனஸ் தியேட்டர் இப்போது Spectrum Mall ஆக மறுபிறவி எடுத்துள்ளது. அதில் S2 Cinemas இல் "வெற்றிவேல்" படம் முன்பதிவு நண்பர் திரு. பாலாஜி செய்திருந்தார்.
படம் பிற்பகல் 3.30 மணிக்கு. வீட்டிலிருந்து 2.30 க்கு OLA mini அழைத்தால் 1.6 x கட்டணம் என்றது. பரவாயில்லை என்று வரச் சொன்னேன். இன்று மதியம் என்ன Peak hour என்று புரியவில்லை. ஆட்டோவில் பேரம் பேசி மூச்சைத் தொலைத்தால் எப்படியும் 200 ரூபாய் கிட்டத்தான் பேரம் படியும்.
சரியாக 2.50க்கெல்லாம் தியேட்டர் வந்து விட்டேன். டிரைவர் திரு. அப்பாஸ் நிறைய பேசினார். அவர் போல நல்ல ஓட்டுநர்கள் கிடைத்தால் பயணங்கள் இனிமையாக இருக்கும். மகிழ்ச்சியான பயணம். நண்பர் திரு. பாலாஜியை அழைத்தால் இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும் என்றார்.
பொழுது போகாமல் Mall இல் இருந்த ஒரு புத்தகக் கடையை மேய்ந்தேன். நிறைய சிறுவர் புத்தகங்கள் மற்றும் வெகு சன புத்தகங்கள். பெரிய collection எதுவுமில்லை. அதிசயமாக திரு. பா.ராகவன் அவர்களின்" கொலம்பிய போதை மாfiயா" புத்தகம் ரூ155க்கு வாங்கி வெளியே வரவும் நண்பர்கள் வந்து சேரவும் சரியாக இருந்தது.
எல்லோரும் SCREEN 3 க்கு செனறோம். அங்கு C 1 முதல் C 10 வரை இருக்கைகள். நல்ல வசதியாக இருந்தது. கொடுமை கொடுமை ன்னு கோவிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமைகள் தலைவிரிச்சாடியதாம் என்பார்களே அதுமாதிரி இந்த எலக்சன் லொல்ளுகளை மறக்க படத்துக்கு வந்தால் அங்கே ஆரம்பமே தேர்தல் சீன்.
பரவாயில்லை. சீக்கிரமே முடித்து விட்டார் திரு. சமுத்திரக்கனி.
படம் பற்றி விமர்சனம் செய்யப் போவதில்லை. ஆனால் சிலவற்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
சில புதிய சொலவடைகள் - நாட்டுக் கோழி முட்டைக்கு நல்ல பாம்பை காவல் வைச்ச மாதிரி இதம்.
கதாநாயகன் சசிக்குமாரின் அறிமுகக் காட்சியில் கதையோடு ஒட்டாத ஒரு குத்துப் பாட்டு தேவையில்லாதது.
அடிக்கடி வரும் ஒத்தாசை (தம்பி ராமையா) தொடர்பான "சும்மாத்தானே இருக்கப் போறீங்க" என்பது போன்ற இரட்டை அர்த்த காமெடி பெண்களைச் சற்று தலை குனிய வைக்கிறது.
"அலைபாயுதே" யில் மாதவன் ஷாலினி விலாசம் கண்டுபிடிக்கப் பேசும் உரையாடலை எண் மட்டும் மாற்றி திரு. சமுத்திரக்கனி பேசுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காப்பியில் இது புதிசு.
படம் மனத்தை நிறைத்ததோ இல்லையோ சில இடங்கள் அருமை.
முன்பின் தெரியாத வீட்டில் மருமகளான பெண் என்பதை கொரியர் பையன் மூலம் வெளிப்படுத்தியது நன்றாயிருந்தது.
வாத்தியாரை நேரடியாக மிரட்டாமல் காபி கொண்டுத்தரும் பணியாளை பிரபு அடிப்பது தவிர்த்து வேறு வகையில் காட்டியிருக்கலாம்.
இடைவேளையில் வழக்கமான சாங்கியங்கள் பாப் கார்ன் சாப்பிடுதல், போன்றவை நடந்தேறின.
படம் ஓருமுறை மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் மட்டும் பாரக்கலாம்.
அங்கிருந்து GRT நகைக்கடையில் பரிசு வாங்கிக் கொண்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு அயன்புரம் வந்து சேரந்தோம்.
திரு. அப்பாவு அவரது குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பு, மணலி திரு. முருகன் அவர்களின் அறுசுவை உணவு எல்லாம் படு சிறப்பு.
செல்வி.ஆர்ஷிதாவிற்கு பரிசு வழங்கி எல்லோருடனும் படமும் வீடியோவும் எடுத்து வருகையை உறுதி செய்து புறப்பட்டோம்.
முகப்பேர் வரும் நண்பர் திரு. நாராயணன் அவர்கள் தனது ஹோண்டா ஆக்டிவாவில் என்னை ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் விட இன்றைய நாள் அட்டகாசமாகக் கழிந்தது.
இறைவனுக்கு நன்றி.

No comments:
Post a Comment