காலை நடை முப்பது நிமிடம்
மாலை மற்றொரு முப்பது நிமிடம்
காலை நடையில் பெரும்பாலும் சுவாரசியம் இ்ருக்காது.
தினமும் நடைமேடையில் நாளிதழ் பிரித்தல்
பால் பாக்கெட் வினியோகம்
மார்க்கெட்டுக்கு வரும் சில்லறை வியாபாரிகள்
ஆம்னி பஸ்களிலில் இருந்து உதிரும் மக்கள்
அண்ணாநகருக்கு சுத்திப் போகணும் என்று சலித்தபடி நூறு ரூபாய் கேட்கும் ஆட்டோ டிரைவர்கள் காருக்குள் உறங்கும் ஓலா, பாஸ்ட் டிராக் ஓட்டுநர்கள்
இப்படித்தான் பெரும்பாலான நாட்களில் அதிக சுவாரசியம் இராது.
இன்று ஹோட்டல் சென்னை கேட் வே தாண்டி சீ பர்ட் டிராவல்ஸ்க்கு கொஞ்சம் முனனால் நடைமேடையில் ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார்.
முழுவதும் நரைத்த பஞ்சுத்தலை.
வாய் நிறைய வெற்றிலை
சிவப்பு நிற வட்டக் கழுத்து T - Shirt
நீலநிற கட்டம் போட்ட லுங்கி
செருப்பு இல்லை
பக்கத்தில் பயன்படுத்தி மீதம் வைக்கப்பட்ட MDM பாக்கு
அவரைக்கடந்து எனக்கு எதிர்ப்புறம் நடந்து வந்த நபரை அழைத்து எதோ கேட்டார்.
அந்த நபரிடம் யாசகம் கேட்ட மாதிரி தெரியவில்லை.
ஆனால் அவர் தெரியாது என்கிற பாவனையில் தலையசைத்தபடி வேகமாய் கடந்தார்.
இப்பொழுது நான் அவரை நெருங்க என்னைக் கூப்பிட்டவர் ஏதோ கேட்டார் எனக்குப் புரியவில்லை.
புரியவில்லை. சத்தமாகச் சொல்லுங்கள் என்றேன்.
இங்கே shooting எங்கே நடக்கிறது என்றார். அவரது தோற்றத்திற்கும் படப்பிடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
தெரியலீங்க என்ற என்னை போகும்படி கையசைத்தவரைத் தாண்டியவன் வழக்கம் போல மறந்தேன்.
சோனா பார்க் லாடஜ் அருகே பூ விற்கக் கடை வைத்திருந்த அம்மா,’ சார் அவர் உங்களிடம் என்ன கேட்டார்’ என்றதும் நினைவுக்கு வந்த பெரியவர் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருந்தார்.
பூக்கார அம்மா,’ என்கிட்ட வெத்தலை பாக்கு எங்கே கிடைக்கும்’ என்று கேட்டார் என்றார்.
“அவர் புள்ளை பட்டணத்தில சினிமா கம்பெனியில இருப்பான் போல அவனத் தேடிக்கிட்டு வந்திருப்பார் போல” என்றார்.
இப்போது அந்த மனிதர் அங்கே இல்லை. எதிர் வரிசையில் விந்தி விந்தி எங்களுக்கு முதுகு காட்டிய படி நடந்து கொண்டிருந்தார்.
பனியனில்
“ நம்பிக்கையோடிரு.
திருக் குமாரன் வருகிறான்”
என்று வசனம் பளிச்செனத் தெரிந்தது.
அவர் யார் எதன் பொருட்டு இங்கே வந்தார் மனிசன் சாப்பிட காசு வைத்திருந்தாரா பல வினாக்கள் மனதில். இங்கேயே சுற்றித் திரிந்தால் இரண்டொரு நாளில் காவல் துறையில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் அவரை மகனிடம் சேர்க்கலாம் . இன்னும் சிந்தனை ஓயவில்லை.
ஓருவேளை பனியனில் கண்ட அந்த தேவ வசனம் காரணமாயிருக்குமோ?

No comments:
Post a Comment