ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள்
பகுதி (1)
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேரதலில் பணியாற்றிய அனுபவங்களை
பகிர்ந்து கொள்கிறேன்.
1984 ஆம் ஆண்டிலிருந்து ஓரிரு தேர்தல் தவிர்த்து எல்லா பொதுத் தேர்தல்களிலும் வாக்குச் சாவடி தலைமைத் தேரதல் அலுவலராகவும், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராகவும் பணியாற்றியதுண்டு.
தேர்தல் வகுப்புகள் மொத்தம் மூன்று.
அவ்வகுப்புகளில் வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் விதிகளை எல்லாம் பிரித்து மேய வேண்டும்.
ஆனால் நடைமுறையில் வருகையைப் பதிவு செய்து விட்டுக் கிளம்புவதிலேயே எல்லோரும் குறியாக இருப்பர்.
வகுப்பு ஏதோ சந்தைக்கடை மாதிரி இருக்கும்.
தேர்தல் பணியாளர்களை புகைப்படம் எடுப்பதுதான் முதல் வகுப்பின் நோக்கம்.
இந்த வகுப்பிலேயே தொடங்கிவிடும் வருவாய்த்துறைப் பணியாளர்களின் அட்ராசிட்டி.
நுட்பமான விஷயங்கள் தெரியாத ஆசாமிகள் கூட வந்திருக்கிற ஆசிரியர் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களை நடத்துகிற விதம் கொடுமை.
என்னைப் பொருத்தவரை முதல் வகுப்பு கிரிமினல் வேஸ்ட்.
அடுத்தது இரண்டாம் வகுப்பு.
இதில் ஒரு வீடியோவைப் போட்டு விட்டு, ஓய்வெடுப்பார்கள்.
அந்த Voting unit மற்றும் Ballot unit இரண்டையும் வைத்துக் கொண்டு கீரி பாம்பு வித்தை காட்டுவார்கள்.
பலமுறை வாக்குச் சாவடியில் தலைமைத் தேர்தல் அலுவலராகப் பணிபுரிந்தவர்களை இந்த இரண்டாம் வகுப்புக்கு பயிற்றுநர் ஆக போட வேண்டும்.
அப்படிச் செய்யாதவரை,”மாவட்ட ஆட்சியாளர் வருகிறார் வருகிறார்” ,என்று உதார் விட்டுத்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
மூன்றாவது வகுப்பும் கிட்டத்தட்ட இரண்டாம் வகுப்பு மாதிரித்தான். ஆனால் கொஞ்சம் புது ஆட்கள் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அதை அப்படி கற்றுக் கொள்ள விட்டுவிடுவோமா நாங்க. ஒரு ஜோடி கருவியில் 100 பேர் போய் விழுவார்கள். அதில் பாதிப் பேர் கருவியோடு தொடர்பில்லாத பணி(PO2) ஆற்றுவோராக இருப்பர்.
முன்பெல்லாம் பணியாற்றும் சாவடி மற்றும் இதர விபரங்கள் மூன்றாவது வகுப்பில் தருவர்.இதனால் நம்மோடு பணியாற்றுபவர்களை தெரிந்து கொள்ள இயலும். இப்போது அப்படி இல்லை.
ஆணை வாக்குப் பதிவிற்கு முன் நாள் கிடைக்கும். அதில்தான் நம்முடன் பணியாற்றப் போகும் நபரை அறிய இயலும்.
இப்போது வாக்குப் பதிவிற்கு முந்தைய நாளில் தான் உங்கள் பணியிடம் தெரியவரும்.
முன்பு 1980- 2000 கால கட்டங்களில் வாக்குச் சாவடி தலைமைத் தேர்தல் அலுவலருக்கான கையேடு என்ற புத்தகம் இரண்டாம் வகுப்பிலேயே தரப்படும்.
இப்போதெல்லாம் வாக்குப் பதிவுக்கு தேவையான பொருட்களுடன் தான் அந்த புத்தகம் தரப்படுகிறது.
அதற்குப் பதிலாக ஒரு சிறிய 2 page guide போன முறை தந்தார்கள்.
அப்புறம் வாக்குப் பதிவுக்கு முன் நாள் சுவாரசியமான கதை.
அது பகுதி(2) இல் தொடரும்.

No comments:
Post a Comment