ஒரு காரியம் சனநாயக அரசாங்கத்தில் சாதிக்க வேண்டும்.
அதிகாரிகளையோ, ஆளும் கட்சிக்காரர்களையோ தெரியாவிட்டால்
அது ஏழை நடந்து போகிற மாதிரி. நிறைய முயற்சி எடுத்து நீண்ட காலம் முயல வேண்டும்.
அடுத்து நடுத்தரவர்க்கம் இங்கும் அதிகாரிகளையோ, ஆளும் கட்சியில் யாரையும் தெரியாது. இது அரசு பேருந்தில் பயணம் மாதிரி.
கொஞ்சம்தான் செலவு. ஆனால் பேருந்து நடுச்சாலையில் நின்றுவிடலாம்.
சாலை மறியலில் கொளுத்தப்படலாம், கல்லெறி படலாம் இப்படி பல இன்னல்களை தாண்டி சேர வேண்டிய இடத்தை அடைவது போல.
கொஞ்சம் பணம் இருந்து ஆளும் கட்சியில் கீழ் மட்ட ஆள் தெரிந்திருப்பது ஆட்டோவில் செல்வது மாதிரி. நிறைய பேரம் பேச வேண்டி இருக்கும். அதிகம் செலவாகும். உயிரை கையில் பிடித்தபடி பயணம். தகராறு சர்வ நிச்சியம்.
நிறைய பணம் இருந்து ஆளும் கட்சியில் இருப்பது என்பது சொந்தமாக கார் வைத்திருப்பது மாதிரி. அடிக்கடி சர்வீஸ் விட வேண்டும். நிறைய செலவாகும்.
அவ்வப்போது பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சமயத்தில் மக்கர் பண்ணும். பிரச்சனையுடன் பயணம். ஆனாலும் அனுபவிச்சுத்தான் ஆக வேண்டும். காரியம் நடக்கவில்லை என்றாலும் வெளியே சொல்லிக்க முடியாது.
நல்ல வசதி, ஆனால் கட்சி ஆட்கள், அதிகாரிகளையும் தெரியாது. இது கால் டாக்ஸி பயணம். பிரச்சனை இல்லை. தொலைபேசியில் பதிவு செய்து எந்தப் பிரச்சனையும் இல்லாத பயணம். புரோக்கரிடம் காரியம் முடிந்ததும் பேசிய பணத்தை செட்டில் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கலாம்.
இது அரசியல்கட்சியில் பொறுப்பில் உள்ள நண்பர் சொன்னது.
எனக்கு சரியாகவே பட்டது.

No comments:
Post a Comment